FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓட்டுநர் காலி பணியிடம்: பதிவு மூப்பு பரிந்துரை அக்.6 இல் வெளியீடு

சிவகங்கை புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ஒரு ஓட்டுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான பதிவு மூப்பு விவரம் அக்.6க்குள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

சிவகங்கை புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ஒரு ஓட்டுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான பதிவு மூப்பு விவரம் அக்.6க்குள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     இதுகுறித்த செய்திக்குறிப்பு: புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் உள்ள ஒரு ஓட்டுநர் (ரூ.9000 ஒட்டு மொத்த ஊதியம்) காலியிடத்துக்கு பகிரங்கப் போட்டி முன்னுரிமை இல்லாதவர் ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பொதுப்பிரிவினர் 30.12.1999 வரையிலும்,  மாற்றுத்திறனாளிகள் 04.06.1997 வரையிலும், பரிந்துரைக்கப்பட உள்ளனர். இதற்கான வயது வரம்பு 31.08.2015 தேதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 35, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர்  32 வயது,  மற்றவர்கள் 30 வயதும் மிகாதிருக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு உண்டு. மேற்கண்ட கல்வித்தகுதி, வயது வரம்புக்கு உள்பட்டு தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள 06.10.2015க்குள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

  மேலும், மேற்கண்ட தகுதியுடையவர்கள் சிவகங்கை  புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநருக்கு நேரடியாகவும் மனு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments