கஞ்சா விற்றதாக 3 பேர் கைது
காரைக்குடியில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடியில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்குடி சேர்வார் ஊரணியைச் சேர்ந்த பூமிநாதன்(28), இதே பகுதியைச் சேர்ந்த ராகுல்ஜி (26), காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சேர்ந்த சூர்யா(23) ஆகிய மூவரும், அப்பகுதியில் கஞ்சா விற்பதாக வடக்கு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து சார்பு ஆய்வாளர் தவமுனி சம்பவ இடத்துக்குச் சென்று மூன்று பேரிடமும் சோதனை மேற்கொண்டதில் 300 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.