FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2 தேர்வு: சிவகங்கை மாவட்டத்தில் 15,954 மாணவ, மாணவியர் எழுதினர்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 15,954 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 15,954 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

   பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 7,109 மாணவர்களும், 8,845 மாண விகளும் என 15,954 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களைக் கண்காணிக்க 1,100 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 64 பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

   இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிவகங்கை அரசு மன்னர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஒவ்வொரு அறையிலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதி மற்றும் மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும்படையினர் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments