மின் கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி சாவு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதன்கிழமை மின்கம்பி அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதன்கிழமை மின்கம்பி அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்புவனம் அருகே மடப்புரம் கிழக்கு காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சோலைமலையான்(28). செவ்வாய்க்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டதால் இவரும் இவரது மனைவி மலர்விழியும் வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கினர். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் மேலிருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே சோலைமலையான் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.