FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

"மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்'

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் என

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.     
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வட்டார அளவிலான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
 தற்போது மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசால் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   
நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தமிழகத்தை பொருத்தவரை பாஜகவுக்கு வாய்ப்பு என்பது கிடையாது. தற்போதைய சூழ்நிலையில் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் என்றார்.  
 இக்கூட்டத்தில், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் மதியழகன் (தெற்கு), நாகராஜன் (வடக்கு), பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், சிவகங்கை வட்டாரத் தலைவர்கள் வேலாயுதம் (வடக்கு), சோணைமுத்து (தெற்கு) உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments