FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூர் ராஜகாளியம்மன்  கோயில் விழாவில் மஞ்சுவிரட்டு

திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 7:46 am IST
பகிர்:

திருப்பத்தூர் ராஜகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இக் கோயிலில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 10 இல் பால்குடம், பூக்குழி, பூத்தட்டு என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட திருவிழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. திருப்பத்தூர் குளம்கரை காத்த அய்யனார் கோயில் திடலில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் 12 காளைகளும் 9 பேர் கொண்ட 12 குழுக்களும் ஈடுபட்டனர். இதில் 2 காளைகள் தவிர ஏனைய காளைகள் பிடிபட்டன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது. மதுரை, திருச்சி, சிவகங்கை, காரைக்குடி, கண்டவராயன்பட்டி, உள்ளிட்ட ஊர்களிலிருந்து காளைகளும், திருப்பத்தூர், அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வீரர்களும் கலந்து கொண்டனர். இதை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். விழா ஏற்பாடுகளை செட்டியதெரு இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments