FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"கஜா' புயலால் பாதித்த குடிசைகளை சீரமைக்க தென்னங்கீற்றுகள் வழங்கல்

"கஜா' புயலால் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டத்தில் குடிசை வீடுகளை சீரமைப்பதற்கு 40 ஆயிரம்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

"கஜா' புயலால் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டத்தில் குடிசை வீடுகளை சீரமைப்பதற்கு 40 ஆயிரம் தென்னங்கீற்றுகள் காரைக்குடியிலிருந்து கொண்டு சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்கப்பட்டுள்ளது.
   ஞாயிற்றுக்கிழமை இரவு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் வழங்கியதாக  மன்றத்தின் தலைவர் ச.மீ. ராசகுமார் தெரிவித்தார்.
  இது குறித்து திங்கள்கிழமை அவர் கூறியதாவது: "கஜா' புயல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு பகுதியில் குடிசை வீடுகளை பலர் இழந்துள்ளனர். அதனால் தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் ரூ. 2.50 லட்சம் செலவில் தென்னங்கீற்றுக்களை வழங்க காரைக்குடியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட  லாரிகளை வழக்குரைஞர் பிரகாசம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 
 40 ஆயிரம் தென்னங்கீற்று கள் 6 லாரிகள் மூலம் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வழங்கி வந்துள்ளோம் என்றார். 
      மக்கள் மன்றச்செயலாளர் கரு.ஆறுமுகம்,பா.ம.க மாநில நிர்வாகி திருஞானம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி சகுபர்சாதிக் மற்றும் தமிழக மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments