FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

உழவன் செயலி பதிவிறக்கம்: சிவகங்கைக்கு மூன்றாமிடம்

வேளாண் தகவல் தொழில்நுட்பங்கள், இடுபொருள்கள் உள்ளிட்ட வேளாண் சார்ந்த விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும்

Updated On : 25 மே 2018, 4:50 am IST
பகிர்:

வேளாண் தகவல் தொழில்நுட்பங்கள், இடுபொருள்கள் உள்ளிட்ட வேளாண் சார்ந்த விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ததில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் மூன்றாமிடம் பெற்றுள்ளதாக சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் என்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள், தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் எனும் பெயரில் செயலி ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதில், விவசாயிகளுக்குரிய மானிய திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, உரங்கள் மற்றும் விதைகள் இருப்பு, பயிர் காப்பீடு விவரம்,சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த உழவன் செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து மே 23 ஆம் தேதி மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 96,616 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 6400 விவசாயிகள் பதிவிறக்கம் செய்து மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் (6300 விவசாயிகள்) இரண்டாம் இடத்தையும், சிவகங்கை மாவட்டம் (5700 விவசாயிகள்) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments