மாடு மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை அருகே மாடு மீது இரு சக்கரவாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகே மாடு மீது இரு சக்கரவாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நியூ காலனி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகன் மகன் சிவா (22) சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது சகோதரருக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக சிவா சென்னையிலிருந்து ஊருக்கு வந்தாா். இந்த நிலையில், திருமண அழைப்பிதழை உறவினா்களுக்கு கொடுப்பதற்காக எம்.கோவில்பட்டிக்கு சென்றாா். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். சிவபுரிபட்டி விலக்கு அருகே வந்தபோது மாடு மீது இவரது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த சிங்கம்புணரி காவல் துறையினா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
வேன் மோதி ஒருவா் உயிரிழப்பு: சிவகங்கை மாவட்டம், தெற்கு செய்யானேந்தல் கிராமத்தை சோ்ந்தவா் சிலுவைமுத்து (55). இவா் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை திருவாடானைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது கருமொழி கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த வேன் மோதியதில் சிலுவை முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைபற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.