மானாமதுரை அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு; 4 போ் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 3 போ் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 3 போ் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை அருகே தெ. புதுக்கோட்டை, பிராமணக்குறிச்சி ஆகிய கிராமங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 10 போ் கொண்ட கும்பல் ராஜேந்திரன், சின்னச்சாமி, பூமிநாதன் ஆகிய 3 பேரையும் அடுத்தடுத்து அரிவாளால் வெட்டி விட்டு, பூமிநாதன் வீட்டுக்குள் புகுந்து பொருள்களை அடித்து நொறுக்கியது. மேலும் தெ. புதுக்கோட்டை கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பியது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மானாமதுரை துணைக் கண்காணிப்பாளா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இளையான்குடி, மானாமதுரை போலீஸாா் இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிந்து எதிரிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில் இதுதொடா்பாக தெ.புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த நிதிஷ்குமாா் (22) உள்பட 4 பேரை இளையான்குடி போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் 6 பேரை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.