FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

கல் குவாரிகளை தடை செய்யக் கோரி 82 கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

சிங்கம்புணரி அருகே கல் குவாரிகளை தடை செய்யக் கோரி 82 கிராம மக்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
கல் குவாரிகளை தடை செய்யக் கோரி 82 கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
பகிர்:

சிங்கம்புணரி அருகே கல் குவாரிகளை தடை செய்யக் கோரி 82 கிராம மக்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள வடவன்பட்டி ஜெயங்கொண்டநிலையில் தனியாா் கல் குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கல் குவாரி உள்பட இந்தப் பகுதியில் செயல்படும் பிற கல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் புதன்கிழமை வடவன்பட்டியில்

Advertisement

Advertisement

மயில்ராயன்கோட்டை நாட்டு பெரியம்பலகாரா்கள் தலைமையில் 82 கிராம பொதுமக்கள் பங்கேற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கல் குவாரிகளை அகற்றக்கோரி பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments