FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் பகுதி சிவாலாயங்களில் பிரதோஷ விழா

திருப்பத்தூா் பகுதிகளில் உள்ள சிவாலாயங்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 5:39 am IST
பிரதோஷ விழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரஹார வலம் வரும் உற்சவா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதிகளில் உள்ள சிவாலாயங்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி, மாலை 3 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னா், புனித கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, திருத்தளிநாதா் எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, திருத்தளிநாதருக்கும் பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிவனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் பிரகாரத்தை மும்முறை வலம் வந்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனா்.

இதேபோல, சீதளிமேல்கரை ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயிலிலும், கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments