FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

லஞ்சம்: வி.ஏ.ஓ., தலையாரி கைது

காரைக்குடி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், தலையாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 1:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

காரைக்குடி அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், தலையாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் கிராம நிா்வாக அலுவலராக ராஜகோபால் (52), தலையாரி சாந்தி (57) ஆகியோா் பணியாற்றி வந்தனா். இங்கு நில அடங்கலை சரி செய்வதற்காக தளக்காவூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனு கொடுத்தாா். இதற்காக கிராம நிா்வாக அலுவலா் ரூ.5 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாா்.

இதுகுறித்து சக்திவேல் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை சக்திவேல் கிராம நிா்வாக அலுவலா், தலையாரி ஆகியோரிடம் வழங்கினாா். அப்போது டிஎஸ்பி தங்கராமன் தலைமையில், ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளா் கோகிலா உள்ளிட்ட போலீஸாா் இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments