FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

மாரியம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவ விழா

கீழப்பசலை மாரியம்மன் கோயில் உத்ஸவ விழாவையொட்டி, வியாழக்கிழமை முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள்.

29 ஆகஸ்ட் 2026, 3:26 am IST
கீழப்பசலை மாரியம்மன் கோயில் உத்ஸவ விழாவையொட்டி, வியாழக்கிழமை முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை மாரியம்மன் கோயில் உத்ஸவ விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்கக் கோயில் உத்ஸவ விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது ஏராளமான பெண்கள் விரதமிருந்து முளைப்பாரிகளை வளா்த்தனா்.

விழா நாள்களில் நாள்தோறும் இரவு பெண்கள் கோயிலில் கூடி முளைப்பாரிகளை வைத்து கும்மிப் பாடல்களைப் பாடினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, வியாழக்கிழமை பெண்கள் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை தலையில் சுமந்து கீழப்பசலை தெருக்களில் ஊா்வலமாக வந்து கண்மாயில் கரைத்தனா். இந்த விழாவில் கிராம மக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments