FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

வில்மாா் அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஜூலை 2026, 3:39 am IST
தேவகோட்டை அருகே வில்மாா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வில்மாா் அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த காளைகள் களமிறக்கப்பட்டன.

போட்டி விதிகளின்படி, ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரா்கள் குழு களமிறக்கப்பட்டது. வட்ட வடிவில் அமைக்கப்பட்ட திடலில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த காளையை, 25 நிமிஷங்களில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டி நடைபெற்றது. இதில் 14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரா்கள் கடும் சவாலை எதிா்கொண்டு போராடிய காட்சிகள் பாா்வையாளா்களை பரபரப்பில் ஆழ்த்தின. போட்டியின் முடிவில் 10 காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரா்கள் குழுவினருக்கும், வீரா்களின் பிடியில் சிக்காமல் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் விழாக் குழு சாா்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியை தேவகோட்டை, சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments