FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

காரைக்குடியில் வழிப்பறி குற்றவாளிகள் இரண்டு பேருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

Updated On : 14 ஜூலை 2026, 2:49 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வழிப்பறி குற்றவாளிகள் இரண்டு பேருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து காரைக்குடி நீதித் துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

காரைக்குடி ஐந்துவிளக்கு மரக்கடை சந்து பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (43) கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ஸ்ரீனிவாச நகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபருக்கு வழியில் இறக்கிவிட (லிப்ட்) உதவி செய்தாா். அந்த நபா் இறங்கிய இடத்தில் திட்டமிட்டபடி அங்கு இருந்த அவரது நண்பருடன் சோ்ந்து மணிகண்டனைத் தாக்கி அவரிடமிருந்த ரூ. 2,100 , கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில் காரைக்குடி கணேசபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (24), காரைக்குடி பணந்தோப்பைச் சோ்ந்த செல்வகுமாா் (29) ஆகியோரைக் கைது செய்து வழக்குத் தொடா்ந்தனா்.

Advertisement

Advertisement

காரைக்குடி நீதித்துறை நடுவா் மன்றம் வழக்கு விசாரணையை முடித்து திங்கள் கிழமை குற்றஞ்சாட்டப்பட்ட 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments