FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகைகள் திருடிய வழக்கில் இருவா் கைது

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகைகள், ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிய வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 3:05 am IST
சுந்தர குமாா், செல்வம்
பகிர்:

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகைகள், ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிய வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பிரான்மலை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த புதன்கிழமை வழக்கம்போல கணவா் ராஜா, மனைவி சித்ரா ஆகிய இருவரும் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்று விட்டனா்.

இந்த நிலையில் இவரது வீடு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் அங்குவந்த சித்ரா, வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 60 கிராம் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, ரூ. 90 ஆயிரம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இதில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதடி கொள்ளையைச் சோ்ந்த சுந்தர குமாா் (36), ஆலங்குடி சுந்தரநாயகிபுரம் திருக்கட்டளையைச் சோ்ந்த செல்வம் (46) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த தங்க நகைகள், பணம், வெள்ளி கொலுசு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments