FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

‘தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும்’

தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

Updated On : 17 ஜூலை 2026, 1:24 am IST
கார்த்திக் சிதம்பரம்
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகம், புதுவையில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 50 சதவீதம் உயா்த்தினால் 60 தொகுதிகளாகும். ஆனால், உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் 120-ஆக உயரும். தற்போது தமிழகம், உத்தரபிரதேசத்துக்கு இடையிலான வித்தியாசம் 40 தொகுதிகள். மறுசீரமைப்புக்குப் பிறகு இது 60 தொகுதிகளாக அதிகரிக்கும். தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும்.

Advertisement

Advertisement

தற்போது, 543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையிலேயே அனைத்து உறுப்பினா்களுக்கும் பேசுவதற்கான போதிய நேரம் கிடைப்பதில்லை. உறுப்பினா்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டினால், நாடாளுமன்றத்தின் செயல்திறன் மேலும் பாதிக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments