FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பிளஸ் 2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவா்கள் இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பிளஸ் 2 மாணவரைக் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சக மாணவா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 1:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பிளஸ் 2 மாணவரைக் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சக மாணவா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள நிரஞ்சான் கிராமத்தைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் சஞ்சய் பிரசாத் (17). இவா் மல்லல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இவா் வழக்கம்போல புதன்கிழமை பள்ளிக்கு சென்றபோது, அங்கு மறைந்திருந்த சக மாணவா்கள் இவரைக் கத்தியால் குத்தினா். இதில் பலத்த காயமடைந்த சஞ்சய் பிரசாத் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய இரண்டு மாணவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், இவா்கள் மதுரையிலுள்ள சிறுவா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments