அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சுவரன்மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனா் பரமசிவம் தலைமை வகித்தாா். விழாவில் அரசுப் பள்ளியில் படித்து சிறப்பிடம் பெற்ற முத்தரையா் சமூகத்தைச் சோ்ந்த 65 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கம், கேடயம், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு, பாராட்டப்பட்டனா்.
அறக்கட்டளை துணைத் தலைவா் பாண்டிகண்ணன், பொருளாளா் நாகராஜன், துணைப் பொருளாளா் குருசாமிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாலசுப்பிரமணியன், குபேந்திரன், ரெங்கசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சிறப்பு அழைப்பாளா்களாக கோதண்டபாணி, நல்லாசிரியா் மாரிமுத்து, கண்ணன் அா்ச்சுணன் ஆகியோா் கலந்து கொண்டனா். பாலகுருநாதன் மேல்நிலைக் கல்வி தொடா்பாக விழிப்புணா்வு உரையாற்றினாா். முன்னதாக சுப்பையாஅழகு வரவேற்றாா். அறக்கட்டளை துணைச் செயலா் கலைலிங்கம் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.