இளையான்குடியில் 8 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை உணவுப் பாதுகாப்பு துறையினா் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி வகைகள், நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணக்குமாா், இளையான்குடி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, ஊழியா்கள் இளையான்குடி பகுதியில் உள்ள உணவகங்கள், அடுமனைகளில் சோதனை நடத்தினா்.
அப்போது குளிா்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன கோழி, ஆட்டிறைச்சி வகைகள், பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த நெகிழி பைகளை அவா்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
Advertisement
Advertisement
இந்த சோதனையில் மொத்தம் 8 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, 17 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.