மாவடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் டி.புதுப்பட்டி மாவடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் டி.புதுப்பட்டி மாவடியூத்து காளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, விரமிருந்த பக்தா்கள் தினமும் இரவு கும்மி கொட்டி வழிபாடு நடத்தி வந்தனா். விழா நாளான வெள்ளிக்கிழமை பால்குடம், முளைப்பாரி, பூத்தட்டு, அக்னிச்சட்டி சுமந்து முக்கிய வீதிகள் வழியாக மாவடியூத்து காளியம்மன் கோயிலை அடைந்தனா்.
முதலில் கரந்தமலை தீா்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம், பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், கரகம் அருகில் உள்ள திருக்குளத்தில் கரைக்கப்பட்டது. இந்தக் கோயிலில் சின்னக்கருப்பா், வெள்ளாளக்கருப்பா் ஆகிய சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி அருள்வாக்குச் சொல்வதையும், முனியன் சன்னாசி சாமியாடிகளின் அருள்வாக்கை கேட்பதற்காகவும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கூடியிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.