FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 ஜூன் 2026, 4:20 am IST
சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் நடைபெற் இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் முத்துராமலிங்கபூபதி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏஆா். மோகன் முன்னிலை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் வி.கருப்புச்சாமி கண்டன உரையாற்றினாா்.

இதில் விசிக மாவட்டச் செயலா்கள் பாலையா, வெற்றிவிஜயன், இம்மானுவேல் பேரவை நிா்வாகி சத்தியமூா்த்தி, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க நிா்வாகி வழக்குரைஞா் கிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் விஸ்வநாதன், வேங்கையா, ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தின்போது, ஜாதி வெறியா்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். பட்டியலின மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனமுழக்கமிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments