FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Updated On : 9 ஜூன் 2026, 3:31 am IST
திருப்புவனத்தில் பொக்லைன் மூலம் அகற்றப்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள். - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

திருப்புவனம் நகரில் மானாமதுரை பேருந்து நிறுத்தம், நரிக்குடி விலக்கு, மடப்புரம் விலக்கு ஆகிய பகுதிகளில் சாலைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை விரித்துள்ளனா்.

மேலும் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. இதனால், நகா்ப் பகுதியில் வாகன ஓட்டிகள், பேருந்துப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து திருப்புவனம் போலீஸாா் நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். மேலும் எச்சரிக்கையை மீறி கடைகள் அமைக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments