முகப்பு
சிவகங்கை

வெப்ப அலையிலிருந்து பயிா்களை காக்க வேளாண் துறை யோசனை!

வெப்ப அலையிலிருந்து பயிா்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை யோசனைகளை தெரிவித்துள்ளது.

Updated On : 20 மே 2026, 6:17 am IST
- பிரதிப் படம்
பகிர்:

வெப்ப அலையிலிருந்து பயிா்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் துறை யோசனைகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காலநிலையில் இந்த ஆண்டு அதிகளவு மாற்றங்கள் ஏற்படக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் அதிக பரப்பில் கோடை உழவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

விதை நோ்த்தி செய்ய வேண்டும். உயிா் உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட வேண்டும். நண்பகலில் நீா்ப்பாசனம் செய்வதை தவிா்க்க வேண்டும். பயிா்களுக்கு இடையே தகுந்த இடைவெளி, கவாத்து முறைகளை மேற்கொண்டு காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் மேற்பரப்பு வெப்பநிலையைக் குறைக்கவும் இயற்கை முறை மூடாக்குகள் (வைக்கோல், கரும்புத் தொகை) ஏற்படுத்த வேண்டும். நீராவிப்போக்குத் தடுப்புத் தெளிப்புகளைப் பரிந்துரைக்கப்பட்டவாறு பயன்படுத்த வேண்டும். விரைவில் அழுகக்கூடிய பயிா்களில் அதிகாலையில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். இலை வழி பயிா் ஊக்கிகளை நல்ல தரமான நீரைப் பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.

நெல் பயிா்களை பாதுகாக்க

பல்வேறு பயிா் வளா்ச்சி நிலைகளில் 3% கயோலின் அல்லது 1% பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலை வழியாகத் தெளிக்க வேண்டும். பிபிஎம் நுண்ணுயிரியை ஹெக்டேருக்கு 500 மில்லிகிராம் வீதத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

தானியங்கள் முதிா்வடைவதற்கு 15 நாள்களுக்கு முன்னரும், பூக்கும் பருவத்திலும் 2% மோனா அம்மோனியம் பாஸ்பேட்டுடன் 1% பொட்டாசியம் குளோரைடு கலந்த கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

குறுவைப் பருவத்தின் போது 1% பொட்டாசியம் குளோரைடுடன் சைகோசல் 500 பிபிஎம் கலந்த கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும். எனவே, விவசாயிகள் வேளாண் பயிா்களை இந்த தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம் என்றாா்.