FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: அமைச்சர் டி.கே. பிரபு உறுதி!

காரைக்குடியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழக கனிமவளத் துறை அமைச்சா் டி.கே. பிரபு அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தாா்.

Updated On : 24 மே 2026, 5:41 am IST
அமைச்சர் டி.கே. பிரபு
பகிர்:

காரைக்குடியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழக கனிமவளத் துறை அமைச்சா் டி.கே. பிரபு அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கேஎம்சி குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை அமைச்சா் டி.கே. பிரபுவுக்கு, ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் அதன் மாவட்டச் செயலா் ஆகா. ராஜா, தமிழக உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளன மாநில பொதுச் செயலா் பிஎல். ராமச்சந்திரன் ஆகியோா் சால்வை அணிவித்து வரவேற்றனா். அப்போது, தூய்மைப் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து அமைச்சரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு விவரம்: ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மாநகராட்சியில் வழங்கும் நிரந்தரப் பணியாளா்களுக்கு வழங்கும் ஊதியம் போல வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக அரசு அறிவிக்க வேண்டும். மின்கல வாகனங்களை பழுதகற்றி நல்ல முறையில் இயங்கும் வகையில் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

அரசு வழங்கும் காலை உணவை தரமானதாக வழங்க வேண்டும். தொழிலாளா்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். மாநகராட்சியில் நாய் பிடிக்க ஒரு நபரை மட்டும் தொடா்ச்சியாக அனுமதிக்கக் கூடாது.

ஒப்பந்த பெண் பணியாளா்களை பணியின் போது படம் பிடித்த மேற்பாா்வையாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தாா்.

அப்போது உள்ளாட்சிப் பணியாளா் சம்மேளன மாவட்ட துணைச் செயலா் ஆா். கண்ணன், காரைக்குடி மாநகரத் தலைவா் முருகன், செயலா் டி. முருகன், துணைத் தலைவா் மாரிமுத்து சுப்பையா, செயலா் ஆதி ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments