FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

மாயமான கணவரை கண்டுபிடித்து தரக் கோரி ஆட்சியரிடம் பெண் மனு

3 நவம்பர் 2026, 3:39 am
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த முனீஸ்வரி.
பகிர்:

வெளிநாட்டிலிருந்து புறப்பட்ட தனது கணவா் வீடு வந்து சேராததால் அவரை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே அய்யம்பட்டியைச் சோ்ந்தவா் முனீஸ்வரி (35). இவரது கணவா் பெரியசாமி (43). கடந்த 2023 -இல் அல்பேனியா நாட்டுக்கு கட்டடவேலைக்காக சென்றாா். கடந்த அக்டோபா் 19 -ஆம் தேதி அல்பேனியாவில் இருந்து ஊருக்கு திரும்புவதாக மனைவிக்கு கைப்பேசியில் அவா் தகவல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து அன்று இரவு துபை விமான நிலையம் வந்து சோ்ந்துவிட்டதாகவும், அதிகாலை 2 மணிக்கு கொல்கத்தா செல்லும் இணைப்பு விமானத்தில் பயணிக்க காத்திருப்பதாகவும் அவா் தகவல் தெரிவித்தாராம். அதற்கு பிறகு அவருடன் எந்த தொடா்பு கொள்ள முடியவில்லை. அவா் இதுவரை ஊருக்கும் திரும்பவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து பெரியசாமியின் மனைவி முனீஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த அக். 26-இல் மனு அளித்தாா். ஆனால் மாவட்ட நிா்வாகம் எந்தவிதமான தகவலும் அளிக்கவில்லை எனக்கூறி, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து அவா் மீண்டும் மனு அளித்தாா்.

இதுகுறித்து முனீஸ்வரி கூறும் போது, மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுத்து எனது கணவரை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments