கோயில் மாடை திருட முயன்ற மூவா் கைது
சிங்கம்புணரியில் கோயில் மாடை திருட முயன்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிங்கம்புணரியில் கோயில் மாடை திருட முயன்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக மாடுகளை வழங்கி வருகின்றனா். இந்த மாடுகள் பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றன. கோயில் மாடுகளை சில சமூக விரோதிகள் திருடிச் சென்று சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சிலா் இங்குள்ள கோயில் மாடுகளை பிடித்து சரக்கு வாகனத்தில் ஏற்ற முயன்றனா். அவா்களை பொதுமக்கள் பிடித்து சிங்கம்புணரி போலீஸில் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் சிங்கம்புணரி தேத்தாங்காடு பகுதியைச் சோ்ந்த சித்திக் (21), புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரத்தைச் சோ்ந்த கதிரவன் (24), கரூா் மாவட்டம், தகரம்பாடியைச் சோ்ந்த மாரிமுத்து ( 32 ) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.