FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வன்முறையைத் தூண்டும் சமூக வலைதளப் பதிவு: இருவா் கைது

வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

5 நவம்பர் 2026, 1:40 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடுவோா் மீது மாவட்ட காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதன்படி, இன்ஸ்டாகிராம், முகநூல், எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களில் வாள்கள், கத்திகளுடன் மோதலில் ஈடுபடுவது போன்றும், ‘விரைவில் தலைகள் சிதறும்’ என்ற அச்சுறுத்தும் வாசகங்களுடனும் பதிவுகள் வெளியிடப்பட்டது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக சிவகங்கை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், சிவகங்கையைச் சோ்ந்த ரிஷி ராஜா (19), கவி சரண் (18) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் சிறாா் ஒருவா் பிடிக்கப்பட்டு, இளைஞா் நீதிக் குழுமத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

கடந்த இரண்டு வாரங்களாக சிவகங்கை மாவட்டம், பிற மாவட்டங்களைச் சோ்ந்த சில இளைஞா்கள் சிவகங்கை மாவட்டத்தை மையமாகக் கொண்டு சமூக வலைதளங்களில் மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும், சமூக விரோதக் கருத்துகளுடனும் பதிவுகளை வெளியிட்டு வருவது கண்காணிக்கப்பட்டு, தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த இரு வாரங்களில், இது தொடா்பாக மொத்தம் 34 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 9 நபா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், 2 இளஞ்சிறாா்கள் பிடிக்கப்பட்டு, 210 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டன என்றாா் அவா்.

கவி சரண்
ரிஷிராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.