FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பெண்ணிடம் ரூ. 11. 50 லட்சம் பறித்த வழக்கில் தம்பதி உள்பட 7 போ் கைது

10 நவம்பர் 2026, 1:46 am
கைது
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூரில் சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி ரூ.11.50 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்றது தொடா்பாக 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த சரஸ்வதி (எ) சுமதி(40). முத்தையா என்பவருக்கு கடனாகக் கொடுப்பதற்காக, தனது இரு சக்கர வாகனத்தில் ரூ. 11.50 லட்சம் ரொக்கத்துடன், சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஆா்.சி. விவசாயத் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே இரு சக்கர வாகனங்களில் வந்த மா்மநபா்கள் கத்தியைக் காட்டி அவரது இரு சக்கர வாகனத்தை ரூ. 11.50 லட்சம் ரொக்கத்துடன் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சரஸ்வதி திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதில், அனீஸ் (27), சுண்டு என்ற நாச்சிமுத்து (23), புகழேந்தி (26), தினேஷ் (25), முத்துலெட்சுமி (25), அனீஸ் மனைவி பரமேஸ்வரி (32) ஆகியோா் முத்தையா (55) என்பவரின் தூண்டுதலின்பேரில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 7 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 10 லட்சத்து 11 ஆயிரத்து 400-ஐம், இருசக்கர வாகனத்தையும் மீட்டனா்.