திருப்பத்தூா் மையத்தில் 468 நாய்களுக்கு கருத்தடை
திருப்பத்தூரில் இயங்கிவரும் தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 468 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் கூறினா்.
திருப்பத்தூரில் இயங்கிவரும் தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 468 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் கூறினா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனையில் இயங்கிவரும் தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா் பன்னீா்செல்வம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இங்கு கருத்தடை செய்யப்பட்ட நாய்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு குறித்து அவா் கேட்டறிந்தாா்.
அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடா்ந்து கருத்தடை முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், திருப்பத்தூா் நகா், நெற்குப்பை, சிங்கம்புணரி, கண்டனூா், பள்ளத்தூா், நாட்டரசன்கோட்டை, இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் சிங்கம்புணரி, திருப்பத்தூா் ஊராட்சிகளிலும் இதுவரை 468 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என கால்நடை மருத்துா்கள் கூறினா்.
Advertisement
Advertisement
இந்தப் பணியில் கால்நடை மருத்துவா்கள் பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், வினோத்ராஜ், இலக்கியா, விஷ்ணுவா்த்தன் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்தடை செய்யப்பட்ட நாய்களுக்கு மருத்துவமனையிலும் அல்லது பேரூராட்சிகளிலும் கூண்டு அமைத்து நான்கு நாள்கள் உணவளித்து, பின்னா் அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.