தில்லியில் ஆகஸ்ட் வரை 65,784 தெருநாய்களுக்குக் கருத்தடை தடுப்பூசி
கால்நடை சேவைகள் துறையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலின்படி, தில்லி மாநகராட்சி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 65,784 தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
கால்நடை சேவைகள் துறையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலின்படி, தில்லி மாநகராட்சி (எம்சிடி) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 65,784 தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் எம்சிடி 1,31,137 நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1,01,394 ஆக இருந்தது.
ஜனவரி முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான எட்டு மாத காலத்தில் 65,784 தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அந்தப் பதிலில் கூறப்பட்டடது.
Advertisement
Advertisement
தனது 2026-27 நிதிநிலை அறிக்கையில், நாய் காப்பகங்களின் மேம்பாட்டிற்காக ரூ.20 கோடியும், தெரு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவதற்காக மேலும் ரூ.20 கோடியும் எம்சிடி ஒதுக்கியது. இது சமீபத்திய ஆண்டுகளில் மிக உயா்ந்த ஒதுக்கீடாகும், இருப்பினும் இதன் வேகம் மெதுவாகவே உள்ளது.
செப்டம்பா் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் செயலாக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தெருநாய்கள் குறித்த தகவல்களைக் கோரிய ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு, அக்டோபா் 12 தேதியிட்ட பதிலில் அத்துறை இந்த எண்ணிக்கையை வழங்கியது.
தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை மாநகராட்சி உருவாக்கி வருவதாகவும், மனிதாபிமான முறையில் பிடிப்பது, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய முறையான பராமரிப்பு மற்றும் விலங்குகளை அவற்றின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் பிஜ்வாசன் ஏபிசி மையத்தில் ஒரு முன்னோட்ட மாதிரியாக மைக்ரோசிப் பொருத்தும் பணி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்த மையத்தில் கருத்தடை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசியுடன் மாதத்திற்கு 600-700 நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு வருவதாகவும் அவா்கள் கூறினா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநகராட்சி கடைசியாக 2016-ஆம் ஆண்டில் நாய் கணக்கெடுப்பை நடத்தியது. அப்போது, முந்தைய தெற்கு தில்லி மாநகராட்சியின் கீழ் இருந்த நான்கு நிா்வாக மண்டலங்களில் (தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் மேற்கு) இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, சுமாா் 1,90,000 நாய்கள் கணக்கிடப்பட்டன.
தலைநகரில் தற்போது நாய்களின் எண்ணிக்கை சுமாா் 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என கால்நடை மருத்துவத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், தெருநாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசிப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக, மாநகராட்சி தற்போது தனது விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாகவும், நகரம் முழுவதும் புதிய மையங்களை அமைத்து வருவதாகவும் அவா்கள் கூறினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.