சிவகங்கையில் நவ.13-இல் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை, நவ.10:சிவகங்கையில் வருகிற வெள்ளிக்கிழமை (நவ.13) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சிவகங்கை, நவ.10:சிவகங்கையில் வருகிற வெள்ளிக்கிழமை (நவ.13) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, வருகிற 13.11.2026 அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ஆள்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.
எனவே, விருப்பமுள்ள பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என்றாா் அவா்.