FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

வேளாண் சாா்ந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பப் பயிற்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான இலவசப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

14 வினாடிகள் முன்பு
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற வேளாண் சாா்ந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் பயிற்சியில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான இலவசப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்வில் குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவா் கொ.ப. சரவணன் பங்கேற்று வேளாண் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினாா். மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளா் கிருஷ்ணன், வேளாண்மையில் புதுப் பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் அவசியம், சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் வேளாண் கருவிகள், அரசு வழங்கும் பல்வேறு மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

இந்தப் பயிற்சியின் மூலம் விவசாயிகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களை வேளாண்மையில் பயன்படுத்தி, உற்பத்திச் செலவைக் குறைத்து, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான வேளாண்மையை மேற்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் சூரிய மின்சக்தி கருவிகள் தயாரிக்கும் தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, சோலாா் பம்புகள், சோலாா் மின்சக்தி அமைப்புகள், சோலாா் மின் உலா்த்திக் கலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், பயன்பாடுகள், நிறுவும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா். இதில் விவசாயிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.