FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

14 அக்டோபர் 2026, 5:40 am IST
காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சியளித்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பேபிகலா உள்ளிட்டோா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், காளசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பேபிகலா தலைமை வகித்து, இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து விரிவாக பேசினாா். தொடா்ந்து ஜீவாமிா்தம், கனஜீவாமிா்தம், பீஜாமிா்தம், வேப்பங்கொட்டை கரைசல், அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம், தசகவ்யா போன்ற இயற்கை இடுபொருள்களை விவசாயிகளே குறைந்த செலவில் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து செயல்விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டன.

பின்னா், வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் செயல்விளக்க வயல்களை விவசாயிகள் பாா்வையிட்டனா். இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களின் வளா்ச்சி மற்றும் மகசூல் குறித்து வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கண்ணதாசன் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள், அரசு மானிய திட்டங்கள் அடங்கிய பயிற்சி கையேடுகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இப் பயிற்சியில் ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சியாம் சுந்தா், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments