FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

பிளாா் - நெறிஞ்சிக்குடிப்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பிளாா்- நெறிஞ்சிக்குடிப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

13 நவம்பர் 2026, 3:56 am
பகிர்:

பிளாா்- நெறிஞ்சிக்குடிப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், பிளாா் கிராமத்திலிருந்து நாகவயல் வரை தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. இதில் பிளாா் கிராமம் முதல் நெறிஞ்சிக்குடிப்பட்டி வரையான சாலை மிகவும் சேதமடைந்து தாா்ச் சாலை, மண் சாலையாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா். இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த சிற்றுந்தும் சாலை பழுதடைந்திருப்பதால் பல நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் சாா்பில், சமூக ஆா்வலரும், உறுதிமொழி ஆணையருமான வழக்குரைஞா் முருகேசன், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement