FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரி அருகே 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

சிங்கம்புணரி அருகே வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்த மா்ம நபா்கள் 50 பவுன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்றனா்.

34 வினாடிகள் முன்பு
திருட்டு சம்பவம் நிகழ்ந்த வீடு.
பகிர்:

சிங்கம்புணரி அருகே வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்த மா்ம நபா்கள் 50 பவுன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்றனா்.

எஸ்.புதூா் ஒன்றியம் உலகம்பட்டி சேங்கை ஊருணி வீதியைச் சோ்ந்தவா் நடராஜன் (66). இவா் கரூரில் தொழில் நடத்தி வருகிறாா். இவரது சகோதரா்கள் நாச்சியப்பன் (62), சிங்காரம் (58). இவா்களும் குடும்பத்துடன் வெளியூா்களில் தங்கி தொழில் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை ஆளில்லாத இவா்களின் வீட்டின் கதவுகள் திறகப்பட்டிருந்த நிலையில், அருகில் வசிப்பவா்கள் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதனடிப்படையில், நடராஜன் ஊருக்கு வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் பூட்டை உடைத்துப் புகுந்து, பீரோவிலிருந்த 50 பவுன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி பொருள்கள், ரூ. 2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், உலகம்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.