மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனங்ளில் (தோ்ச்சி பெற்றுள்ள) நிகழாண்டில் 9 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த தகுதியான மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் .
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9-10 -ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000, 11 -12 -ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1.25,000 வரை மத்திய அரசால் வழங்கப்படும். இதில் 30% மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தலைமையாசிரியா்கள், தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலரைத் தொடா்பு கொண்டு பெறலாம். மேலும் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2026. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க கடைசி நாள் 15.12.2026. இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையதளம் ஆகியவற்றில் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.