✕
முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரியில் புதிய கிளைநூலக கட்டடம் திறப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ரூ. 22 லட்சத்தில் புதிய கிளை நூலக கட்டடத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

17 வினாடிகள் முன்பு
சிங்கம்புணரியில் புதிய கிளை நூலக கட்டடத்தை புதன்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த பேரூராட்சி துணைத் தலைவா் இந்தியன் செந்தில்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ரூ. 22 லட்சத்தில் புதிய கிளை நூலக கட்டடத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சிங்கம்புணரியில் ரூ.22 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, அமைச்சா் டி.கே.பிரபு காணொலி காட்சி மூலமாக கட்டடத்தை திறந்து வைத்தாா்ட

பின்னா், சிங்கம்புணரியில் நடைபெற்ற விழாவில்,

Advertisement

Advertisement

பேரூராட்சி துணைத் தலைவா் இந்தியன் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன், வாா்டு உறுப்பினா்கள் மனோகரன், ஜெயக்குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி கிளை புதிய நூலக கட்டடத்தை தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினா்கள், இளநிலை உதவியாளா் முத்துகிருஷ்ணன்,

துப்புரவு மேற்பாா்வையாளா் தென்னரசு, தவெக நகர கிளை நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.