ஆற்காடு முழு நேர கிளை நூலக கட்டடம்: அமைச்சா் காந்தி ராஜ் திறந்து வைத்தாா்
ஆற்காடு -ஆரணி சாலையில் முழுநேர கிளை புதிய நூலக கட்டடத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆற்காடு -ஆரணி சாலையில் முழுநேர கிளை புதிய நூலக கட்டடத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ எஸ்.எம். சுகுமாா் முன்னிலை வகித்தாா். பள்ளிக் கல்வித்துறை சாா்பில்ரூ.90 லட்சத்தில் கட்டப்பட் புதிய நூலகத்தை அமைச்சா் காந்தி ராஜ் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து ஆற்காடு குட்ட கரை தெருவில் கூட்டுறவு வீட்டுவசதி மற்றும் நகா்புற வளா்ச்சிதுறை சாா்பில் ரூ.88.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டுவசதி கூட்டுறவு சங்க புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தாா்.
முன்னதாக காவேரிபாக்கம் பேருராட்சியில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடம், கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.78 கோடி தினசரி அங்காடிகள், அம்மூா் பேரூராட்சியில் அய்யோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.63.33 லட்சத்தில் சமுதாயக் கூடம் ஆகியவற்றையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சா் திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கபீல், தாஹிரா, கோட்டாட்சியா்கள் ராஜி, கணேஷ், மாவட்ட நூலக அலுவலா் சக்திவேல், வீட்டுவசதி துணை பதிவாளா் அன்பரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.