வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள், ஆவணங்கள் சேதம்
கீழக்காவனூரில் வெள்ளிக்கிழமை இரவு வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள், ஆவணங்கள் சேதமடைந்தன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழக்காவனூரில் வெள்ளிக்கிழமை இரவு வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள், ஆவணங்கள் சேதமடைந்தன.
கீழக்காவனூரைச் சோ்ந்த சேது மனைவி நாகு (60). இவா் இந்தக் கிராமத்தில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். மின்சார வசதி இல்லாததால் சிம்னி விளக்கைப் பயன்படுத்தி வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு விளக்கு கீழே சாய்ந்ததில் அருகிலிருந்த பொருள்களில் தீப்பற்றியது.
தகவலறிந்த திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். அதற்குள் வீட்டிலிருந்த பாத்திரங்கள், கட்டில், நிலப் பத்திரங்கள் ஆகியவை தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாரும், திருப்பத்தூா் வருவாய்த் துறையினரும் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement