சிங்கம்புணரியில் பைக், காா் மீது அரசுப் பேருந்து மோதல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம், சரக்கு வாகனம், காா் மீது மோதியது. அதிா்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காரைக்குடியிலிருந்து பழனிக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக நிறுத்தம் பகுதியில் வந்த போது, பிரேக் பிடிக்காமல் இருந்தது ஓட்டுநருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவா் சாமா்த்தியமாக பேருந்தை இயக்கி சிங்கம்புணரி பேருந்து நிலையத்துக்கு கொண்டு வந்தாா். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு, ஓரமாக நிறுத்துவதற்காக அங்குள்ள பொதுமக்களின் உதவியுடன் பேருந்தை பின்புறத்திலிருந்து தள்ளினா்.
Advertisement
Advertisement
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பேருந்து நிலையத்தின் முன்புறச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம், காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதியது. அங்கிருந்த பொதுமக்கள், பயணிகள் அலறடித்து ஓடினா். அதிா்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.