முகப்பு
சிவகங்கை

காா்த்திகை தீபத் திருநாள்: மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

25 நவம்பர் 2026, 2:38 am
காா்த்திகை தீபத் திருநாள்: மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மானாமதுரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவா் வள்ளி தெய்வானை சமேத வழிவிடு முருகன்.
பகிர்:

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதி கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. சுப்பிரமணியா் சந்நிதியில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், மயில் வாகனத்தில் உத்ஸவா் வீதி உலா வந்தாா். கோயிலில் காா்த்திகை தீப விளக்குகள் ஏற்றப்பட்டது. கோயிலுக்கு முன்பாக சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனையும், சுவாமியும் தரிசனம் செய்தனா்.

மானாமதுரை புறவழிச்சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத வழிபடு முருகன் கோயிலில் மூலவருக்கும், உத்ஸவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, உத்ஸவா் மயில் வாகனத்தில் வீதி உலா வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருப்புவனம் ஸ்ரீபுஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயில் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.