முகப்பு
திருப்பூர்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

35 வினாடிகள் முன்பு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் முன் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை.
பகிர்:

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. கிருத்திகையொட்டி, சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, கோயில் முன்புறம் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

அப்போது, ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் அம்பாளும், கிருத்திகையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், பழங்கரை பொன் சோழிஸ்வரா் கோயில், கருவலூா் கங்காதீஸ்வரா் கோயில், குட்டகம் மொக்கணீஸ்வரா் கோயில், சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.