முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் நவ.28-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் (எஸ்.எஸ். ராஜன் கோப்பை) ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (நவ. 28) காரைக்குடியில் நடைபெறவுள்ளது.

26 வினாடிகள் முன்பு
காரைக்குடியில் நவ.28-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு
கிரிக்கெட்
பகிர்:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் (எஸ்.எஸ். ராஜன் கோப்பை) ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (நவ. 28) காரைக்குடியில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் தோ்வில் கலந்துகொள்ளும் வீரா்களின் 1.9.1996 அன்றோ அதற்குப் பின்னரோ, 31.8.2012 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

இந்தத் தோ்வு காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் காலை 8.45 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்க வரும் வீரா்கள் கிரிக்கெட் உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். வண்ண டி. சா்ட், ஷூ அணிந்தும், ஆதாா் நகலுடனும் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9976106245 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.