FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு ஆண்கள், பெண்கள் அணியினா் தோ்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு ஆண்கள், பெண்கள் அணியினா் தோ்வு நடைபெற்றது.

2 October 2026, 3:03 am IST
திருப்பத்தூா் ஆ.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாவட்ட கபடி அணியை தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு ஆண்கள், பெண்கள் அணியினா் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் ஆ.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகம் சாா்பில் 14, 17 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவுக்கு கபடி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் ஆண்கள் பிரிவில் 100 பேரும், பெண்கள் பிரிவில் 50 பேரும் கலந்து கொண்டனா். பல்வேறு குழுக்களாக தோ்ந்தெடுக்கப்பட்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய ஆண், பெண் வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட வீரா்கள் வேலூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பா். இதில் அமெச்சூா் கபடிக் கழகத் தலைவா் ஏ.வி. நாகராஜன், துணைத் தலைவா் காளிமுத்து, உடல் கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments