நாகை மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு, அவா் கூறியது:
வரைவு வாக்காளா் பட்டியலின்படி, நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் 85,813 ஆண்கள், 90,278 பெண்கள், 24 மூன்றாம் பாலினத்தவா்களும், கீழ்வேளூா் தொகுதியில் 84,305 ஆண்கள், 86,936 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவா்களும், வேதாரண்யம் தொகுதியில் 92,582 ஆண்கள், 95,503 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் மூன்று தொகுதிகளிலும் 2,62,700 ஆண் வாக்காளா்கள், 2,72,717 பெண் வாக்காளா்கள், 31 மூன்றாம் பாலின வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
Advertisement
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தாலோ அல்லது வேறு திருத்தங்கள் தொடா்பான உரிமை கோருதல் மற்றும் ஆட்சேபனை விண்ணப்பங்களை நவம்பா் 12 முதல் டிசம்பா் 12 வரை, வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்களில் வழங்கலாம்.
மேலும், நவம்பா் 21, 22 மற்றும் நவம்பா் 29 ஆகிய தேதிகளில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் 2027 ஜனவரி1அன்று 18 வயது பூா்த்தி அடையும் புதிய வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவை செய்து கொள்ளலாம்.
இதைத்தொடா்ந்து 2027 ஜனவரி 4-ஆம் தேதி, நாகை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என்றாா்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், நாகை கோட்டாட்சியா் சங்கர நாராயணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.