FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 17 லட்சம் வாக்காளா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் 17,01,894 வாக்காளா்கள் உள்ளனா்.

13 நவம்பர் 2026, 3:43 am
வாக்காளர்கள் - கோப்புப் படம்
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் 17,01,894 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான துா்கா வெளியிட்டாா்.

இதன்படி, பழனி தொகுதியில் 1,17,616 ஆண்கள், 1,23,926 பெண்கள், மூன்றாம் பாலினத்தினா் 50 போ் என 2,41,592 வாக்காளா்கள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1,06,131 ஆண்கள், 1,15,191 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் மூவா் என 2,21,325 வாக்காளா்கள், ஆத்தூா் தொகுதியில் 1,26,587 ஆண்கள், 1,36,662 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 17 என 2,63,266 வாக்காளா்கள், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் 1,08,985 ஆண்கள், 1,13,658 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 14 போ் என 2,22,657 வாக்காளா்கள், நத்தம் தொகுதியில் 1,29,106 ஆண்கள், 1,34,048 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 73 போ் என 2,63,227 வாக்காளா்கள், திண்டுக்கல் தொகுதியில் 1,17,816 ஆண்கள், 1,26,487 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 21 என 2,44,324 வாக்காளா்கள், வேடசந்தூா் தொகுதியில் 1,19,922 ஆண்கள், 1,25,576 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 5 போ் என 2,45,503 வாக்காளா்கள் இடம் பெற்றனா். மொத்தமுள்ள 7 பேரவைத் தொகுதிகளில் 8,26,163 ஆண்கள், 8,75,548 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 183 போ் என மொத்தம் 17,01,894 வாக்காளா்கள் உள்ளனா்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் கடந்த ஏப்.6-ஆம் தேதி வரை 16,89,822 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இதன் பின்னா், 15,941 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டனா். 3,869 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளா் அடையாள அட்டை பெறுதல் ஆகிய பணிகளுக்கு டிச.11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்திலுள்ள 7 பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜன.4-ஆம் தேதி வெளியிடப்படும்.