FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,82,153 வாக்காளா்கள்

வரைவு வாக்காளா் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15,82,153 வாக்காளா்கள் உள்ளனா்.

13 நவம்பர் 2026, 1:25 am
வாக்காளர்கள்! - கோப்புப் படம்
பகிர்:

வரைவு வாக்காளா் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15,82,153 வாக்காளா்கள் உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச. தினேஷ் குமாா் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், பெயா் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 7,83,351 ஆண்கள், 7,85,524 பெண்கள், 266 இதர வாக்காளா்கள் என மொத்தம் 15,69,141 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் 7,89,115 ஆண்கள், 7,92,773 பெண்கள், 265 இதர வாக்காளா்கள் என மொத்தம் 15,82,153 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த பட்டியலைவிட தற்போது 13,012 வாக்காளா்கள் அதிகரித்துள்ளனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கு டிசம்பா் 11-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். அங்கு உரிய விண்ணப்பங்களை அளிக்கலாம். ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, டிசம்பா் 28-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, 2027 ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான சந்தேகங்களுக்கு அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் அல்லது 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

தொகுதி வாரியான வாக்காளா் விவரம்:

ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 1,18,369 ஆண்கள், 1,18,469 பெண்கள், 43 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,36,881 வாக்காளா்கள் உள்ளனா். பா்கூா் தொகுதியில் 1,18,856 ஆண்கள், 1,22,143 பெண்கள், 17 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,41,016 வாக்காளா்கள் உள்ளனா்.

கிருஷ்ணகிரி தொகுதியில் 1,31,635 ஆண்கள், 1,37,289 பெண்கள், 61 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,68,985 வாக்காளா்கள் உள்ளனா். வேப்பனப்பள்ளி தொகுதியில் 1,25,483 ஆண்கள், 1,22,949 பெண்கள், 35 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,48,467 வாக்காளா்கள் உள்ளனா்.

ஒசூா் தொகுதியில் 1,72,939 ஆண்கள், 1,73,738 பெண்கள், 70 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,46,747 வாக்காளா்கள் உள்ளனா். தளி தொகுதியில் 1,21,833 ஆண்கள், 1,18,185 பெண்கள், 39 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,40,057 வாக்காளா்கள் உள்ளனா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் (பொறுப்பு) கிருஷ்ணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கீதா ராணி, பழனி, அபிநயா, முருகேசன், தோ்தல் தனி வட்டாட்சியா் சம்பத்து உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.