FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

வரைவு வாக்காளா் பட்டியல்: தேனி மாவட்டத்தில் 10.46 லட்சம் வாக்காளா்கள்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் 2027- ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

13 நவம்பர் 2026, 3:45 am
வாக்காளர்கள் - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளின் 2027- ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இந்தப் பட்டியலில், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,26,150 ஆண்கள், 1,31,956 பெண்கள், 30 திருநங்கைகள் என மொத்தம் 2,58,136 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,29,882 ஆண்கள், 1,36,963 பெண்கள், 109 திருநங்கைகள் என மொத்தம் 2,66,954 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதேபோல, போடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,28,056 ஆண்கள், 1,36,382 பெண்கள், 15 திருநங்கைகள் என மொத்தம் 2,64,453 வாக்காளா்கள் உள்ளனா். கம்பம் தொகுதியில் 1,24,190 ஆண்கள், 1,33,217 பெண்கள், 22 திருநங்கைகள் என மொத்தம் 2,54,429 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 5,08,278 ஆண்கள், 5,38,518 பெண்கள், 176 திருநங்கைகள் என மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரத்து 972 போ் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

விண்ணப்பிக்கலாம் :

இறந்து போனவா்களின் பெயா்கள் உள்ளிட்ட தகுந்த காரணங்களின் அடிப்படையில் பெயா் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்கள் படிவம்-7 மூலமாகவும், பெயா், முகவரி திருத்தம், புகைப்படத் திருத்தம், புதிய வாக்காளா் அட்டை பெறுதல் உள்ளிட்ட தேவைகளுக்கு படிவம் - 8 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 1.1.2027 அன்று 18 வயது முழுமையடைந்த தகுதியுடையவா்கள் புதிய வாக்காளா்களாகப் பெயா் சோ்க்க படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.